--பாரதியார்
தமிழன்னையின் மணிமகுடத்தில் மற்றுமொரு மாணிக்கமாய் மிளிர்கிறது நமது வாகை தமிழ்ச்சங்கம். தமிழக அரசு அனுமதி பெற்று, தமிழ் மொழி, இலக்கியம், பண்பாடு ஆகியவை சார்ந்த அறிவை இக்கால அறிவியல் சிந்தனை & திறன்களுடன் அனைத்து தரப்பினரிடமும் ஊக்குவித்தலையும் வளர்த்தலையும் மேம்படுத்துதலையும் நோக்கமாகக்கொண்டு வாகை தமிழ்ச்சங்கம் இயங்கி வருகிறது. நமது வாகை தமிழ்ச்சங்கம், தமிழ்நாடு அரசு மற்றும் இந்திய அரசின் மேலும் பல செயல்திட்டங்களின் கீழும் அனுமதி பெற்ற தன்னார்வல, தமிழ்சார்ந்த சமூக சேவை நோக்கம் கொண்ட அமைப்பாகும். மதுரை உலக தமிழ்ச் சங்கத்தின் அதிகாரப்பூர்வ உறுப்பினராக இணைத்தது மட்டுமின்றி, உள்நாட்டு & பன்னாட்டு அளவிலான பலதரப்பட்ட மக்கள் வயது வேறுபாடின்றி நமது வாகை தமிழ்ச்சங்கத்தில் இணைந்து தத்தமது திறன்களை மேம்படுத்தவும் வெளிக்கொணரவுமான களமாகத் திகழ்ந்து வருகிறது. இவ்வமைப்பின் தொடர் சாதனைகளுக்குக் காரணம் என்னுடன் பயணித்து வரும் தமிழ்ச்சான்றோரும் வாகை தமிழ்ச்சங்க குடும்ப உறுப்பினருமே ஆவர். தொடர்ந்து தமிழ்ப்பணியாற்றிட உந்துதலாக இருக்கும் அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
தலைவர்
வாகை தமிழ்ச்சங்கம்
நாமக்கல்
தமிழ் மொழி, இலக்கியம், பண்பாடு ஆகியவை சார்ந்த அறிவை இக்கால அறிவியல் சிந்தனை & திறன்களுடன் அனைத்து தரப்பினரிடமும் ஊக்குவித்தலும், வளர்த்தலும், மேம்படுத்துதலும்.
தமிழ் மொழி, இலக்கியம், பண்பாடு ஆகியவை சார்ந்த அறிவை இக்கால அறிவியல் சிந்தனை & திறன்களுடன் அனைத்து தரப்பினரிடமும் ஊக்குவித்தலும், வளர்த்தலும், மேம்படுத்துதலும்.
வாகை தமிழ்ச்சங்கம் தமிழின் கலாச்சார-மொழியியல் பாரம்பரியத்தில் ஆர்வமுள்ள அனைவரையும் ஒன்றிணைக்கும் நோக்கத்துடன் தொண்டாற்றும் ஓர் இலாப நோக்கற்ற, மதச்சார்பற்ற, கலாச்சார-சமூக அமைப்பாகும்.
கற்றல், கற்பித்தல், எழுதுதல், வாசித்தல் போன்ற திறன்களுக்குப் பயிற்சியளித்தலும், வெளிப்படுத்துதலும் மேம்படுத்துதலும் செய்தல்.
கருத்தரங்குகள், வினாடி வினாக்கள், ஆசிரிய-மாணவ மேம்பாட்டுத் திட்டங்கள், ஆய்வரங்கங்கள் ஆகிய நிகழ்வுகள் மூலம் தமிழ் வளர்ச்சிப் பணிகளில் ஈடுபடுதல்.
தலைசிறந்த தமிழ் ஆளுமைகள், சிறந்த கலைஞர்கள், துறைசார், திறன்சார்ந்த வல்லுநர்கள், அறிஞர்கள், ஆய்வாளர்கள், தன்னார்வலர்கள் ஆகியோருக்குப் பட்டங்களும் விருதுகளும் வழங்கிப் பெருமைப்படுத்துதல்.
தமிழ்நாட்டு அரசின் - 1975ஆம் ஆண்டு தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச்சட்டத்தின் கீழ் (தமிழ்நாடு சட்டம் 27/1975) பதிவு செய்யப்பட்டது. (பதிவு எண்: SRG/நாமக்கல்/143/2022).
மத்திய அரசின் நுண்ணிய, சிறு மற்றும் நடுத்தர நிறுவன அமைச்சக தேசிய தொழில் வகைப்பாடு புத்தகங்கள் வெளியிடுதல், பிரசுரங்கள், துண்டு பிரசுரங்கள் மற்றும் ஒத்த வெளியீடுகள், கலைக்களஞ்சியங்கள் (CD ROM உட்பட), கல்வி ஆதரவு சேவைகள் மற்றும் பிற படைப்பு கலைகள் மற்றும் பொழுதுபோக்கு நடவடிக்கைகள் திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டது (பதிவு எண்: UDYAM-TN-14-0037173).
அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி சபையின் (AICTE) பயிற்சி வழங்குநர். (Internship Provider பதிவு எண்: CORPORATE63C3E52AAD72D1673782570)
மதுரை உலக தமிழ்ச் சங்க அதிகாரபூர்வ உறுப்பினர்; கடித ந.க.எண் 299 / 2017, நாள் 19.09.2022 (பதிவு எண்: UTS / TN 126).
மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய தொழில் சேவை திட்டத்தில் திறன் வழங்குநராக பதிவு பெற்றது. (பதிவு எண்: S17L69-1517358106310)
மத்திய அரசின் நிதி ஆயோக் திட்டத்தின் கீழ் இயங்கி வரும் அரசு சாரா அமைப்புகளின் கண்ணாடி (NGO Darpan) திட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. (பதிவு எண்:TN/2021/0282436)
ராஜா ராம்மோஹன் ராய் தேசிய புத்தக வெளியீட்டு நிறுவனம் (RRRNA for ISBN) புத்தகம் வெளியிடுதல் திட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.